உண்மையில் வலிமை படம் உள்ளதா? வெறுத்தே போன ரசிகர்கள்.!  
                                    
                                    
                                   Thala Fans sad about valimai movie 
 
                                 
                               
                                
                                      
                                            உழைப்பாளர்கள் தினமான இன்று பிரபல நடிகர் அஜித்குமார் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிக்கிறார். 
இதற்கு காரணம், அவருடைய கடின உழைப்பு தான். இவருடைய திரை வாழ்க்கை வெற்றியையும், தோல்வியையும் சமமாக கொண்டது. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் #HBDThalaAjith என்ற ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.
 
 
இவருக்கு ரசிகர் மன்றம் இல்லாமல் கூட நிறைய ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது என்பதை நாங்கள் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது, அவருடைய பிறந்தநாளுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தல பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள்வலிமை அப்டேட் கேட்டு வெறுத்துப்போய் உண்மையில் வலிமை என்று ஒரு படம் இருக்கிறதா இல்லையா அதையாவது சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி வெறுத்துப் போய் இருக்கின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Thala Fans sad about valimai movie