தல அஜித்தின் சைக்கிள் பயணம்.! வெறித்தனமான புகைப்படங்கள் வைரல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் எச்.வினோத் தயாரித்து தல அஜித் நடிக்கும் திரைப்படம்தான் வலிமை. முன்னதாக நேர்கொண்டபார்வை படத்திலும் இதே கூட்டணி தான் இருந்தது. அந்த படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, வலிமை படத்திலும் அதே கூட்டணி தொடர்கிறது. 

படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொரானா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால், வலிமை பட வெளியீடு தள்ளிப் போனது. இது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விஷயமாக இருந்தது. 

விஜய் மற்றும் ரஜினி படங்களின் அப்டேட் வெளியாக துவங்கியதும், தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இணையதளத்தில் குத்த வைத்தனர். ஆனால், போனி கபூர் தனது மற்ற படங்களில் கவனம் செலுத்தி வந்தாரே ஒழிய, வலிமை படம் குறித்து எந்த தகவல்களையும் ரசிகர்களுக்கு அவர் கொடுக்கவில்லை. 

மாறாக படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியது. அதை வைத்து ரசிகர்கள் தங்களை அமைதியாக முயற்சித்தனர். தல அஜித் ஹைதராபாத்தில் இருக்கிறார் என்ற தகவல் கூட அப்படித்தான் லீக் ஆகியது. இத்தகைய சூழலில், நடிகர் அஜீத் தனது நண்பர்களுடன் இணைந்து சைக்கிள் பயணம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thala ajith cycling photos viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal