இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் சீரியல் நடிகை!  - Seithipunal
Seithipunal


‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். 

 ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ தொடரில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தீபா. 

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் தொடர்களிலும் தீபா நடித்து வருகிறார். 

முதல் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்று தனது மகனுடன் தனியாக வசித்து வரும் தீபா, இரண்டாவது திருமணம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

சீரியல் தயாரிப்பு மேலாளராக சாய் கணேஷ் பாபு என்பவரை, தீபா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. 

தீபாவை மறுமணம் செய்ய சாய் கணேஷ் வீட்டில் எதிர்ப்பு வந்ததாகவும், இதனால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சாய் கணேஷ் பாபுவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தீபா, தனது திருமண விடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil TV Show Actress Second Marriage


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->