நான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச்சக்கட்ட கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்ட நடிகர் டி.ராஜேந்திரன் தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அமோக வெற்றிபெற்றார். இந்த தோல்வி டி.ராஜேந்தர் தரப்புக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சென்னையில் வைத்து செய்தியாளர்ளை சந்தித்த நடிகர் டி.ராஜேந்திரன், " நீதியரசர் வாக்குகளின் எண்ணிக்கை மறுநாள் நடைபெறும் என்றே தெரிவித்தார். காலையில் தேர்தல் நடைபெற்று முடிந்ததும், தேர்தல் முடிவுகள் மாலையே அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், வாக்கு எண்ணிக்கை மறுநாள் நடைபெற வேண்டிய கட்டாயம் என்ன?.

இதே பழைய ராஜேந்திரனாக நான் இருந்திருந்தால், தேர்தலை புறக்கணித்து இருப்பேன். ஆனால், இன்று என்னால் அது முடியவில்லை. தயாரிப்பாளர் சங்க தேர்தல் விதிகளின் படி நடைபெறவில்லை. விதிகளை மீறியே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. 

1303 பேர் வாக்காளர் பட்டியலில், 800 பேரிடம் மட்டுமே என்னிடம் பேச முடிந்தது. வாக்காளர் பட்டியல் கொடுத்ததில், எந்த விதமான விபரமும் சரியாக இல்லை. நான் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேச வரவில்லை. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. தேர்தலில் முறைகேடு நடைபெறலாம். ஆனால், முறைகேடே தேர்தலாக நடைபெற கூடாது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T Rajendran Pressmeet 27 November 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal