எதார்த்த சினிமாவில் சூர்யா… ரசிகர்கள் காத்திருக்கும் புதிய கூட்டணி...!
Suriya realistic film new collaboration that fans eagerly awaiting
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் சூர்யா, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘கருப்பு’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கம் மற்றும் ஜீத்து மாதவன் இயக்கம் என அடுத்தடுத்து இரண்டு முக்கிய படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார் சூர்யா.
இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு அதிரடி தகவல் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதார்த்த சினிமாவால் ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படம், சூர்யாவின் கேரியரில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும், இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Suriya realistic film new collaboration that fans eagerly awaiting