இயக்குனர் பாலாவும் - நானும் இப்படிப்பட்டவர்கள்.. சுதா கொங்கரா மனம் திறந்து பேச்சு..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரசிகர்களால் இன்றுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. இவர் துரோகி படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார். 

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பல வருடமாக பணியாற்றிவிட்டு துரோகி என்ற படத்தை இவர் இயக்கியிருந்த நிலையில், அது வெற்றி அடையவில்லை என்பதால் சில வருட இடைவெளி விட்டிருந்தார். 

பின் மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கியிருந்தார். சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனுக்கு, அப்படம் மாறுபட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்று படம் பார்போரின் மனதை கவர்ந்தது.  நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று, தற்போது இதன் இந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்திருந்த பேட்டியில், "நான் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தது கிடையாது. பாலாவுக்கும் எனக்கும் இடையேயான உறவு அண்ணன் தங்கை காண உறவு" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudha kongara speech about director bala


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->