''ஸ்டார்'' திரைப்படத்தின் நியூ அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2023 ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டாடா'. இந்த திரைப்படத்தில் அபர்ணாதாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா, டி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கவின், இளன் இயக்கத்தில் ''ஸ்டார்'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் முதல் பாடல் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இதனை தொடர்ந்து ஸ்டார் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ''விண்டேஜ் லவ்'' பாடலின் முன்னோட்டம் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

star movie new update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->