நிச்சயமாக கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன் - நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்!
Sri Reddy reply to some troll people
ஆந்திர மாநில தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால், விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி சொன்னதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரொட்டி படு தோல்வியை சந்தித்து ஆட்சியை எழுந்து உள்ள நிலையில், சொன்னபடி எப்போது ஆடை இல்லாமல் நடக்கப் போகிறீர்கள் என்று நடிகர் ஸ்ரீ ரெட்டியை சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, நான் ஆடையில்லாமல் கடற்கரையில் நடப்பேன் என்று எப்போது சொன்னேன். நான் அப்படி சொல்லவே இல்லை.

நான் அப்படி சொன்னதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒரு வேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால், நிச்சயமாக நான் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன்.
நான் என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எந்த பதிவையும் நீக்கப்போவதில்லை. உங்களுடைய கேலி கிண்டலுக்கு பலியாகின்ற ஆள் நான் இல்லை. உங்கள் அனைவரையும் நான் துணிச்சலாக எதிர்கொள்வேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்து வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் பவன் கல்யாணத்துக்கு எதிராகவும் சர்ச்சையான சில கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sri Reddy reply to some troll people