சொர்க்கவாசல் படத்தின் ஓ.டி.டி. அப்டேட்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'சொர்க்கவாசல்'. 

ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தக் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சொர்க்கவாசல் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப்படம் வருகிற 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sorkavasal movie ott update


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->