ஆர்.ஜே. பாலாஜி குறித்து இணையத்தில் வைரலாக போஸ்ட்.! அப்செட்டான பாலாஜி.!  
                                    
                                    
                                   Social media post about RJ Balaji 
 
                                 
                               
                                
                                      
                                            துபாயில் IPL2020  நடந்துவருகிறது. அதற்கு மும்பையில் இருந்து கொண்டு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தமிழ் வர்ணனை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது வர்ணனை குறித்து இணையத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகின்றது. 
அந்த பதிவில், "ஆர் ஜே பாலாஜியை தவிர கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு வேற ஆளே இல்லயா.? இந்த பாலாஜி கமென்ட்ரிங்கிற கலையையே கொலை பண்றானே. கேக்க ஆள் இல்லையா.? அம்பயர் இப்படிப் பண்ணிப்போட்டானே.? சில நண்பர்கள் போடற பதிவு பாத்தா சிரிப்பா வருது. 
ஆனானப்பட்ட ஒலிம்பிக்கே தள்ளி வச்சாச்சு. இந்த ஐபிஎல் என்ன தள்ளி வைக்க முடியாத அல்லது ஒருவருசம் தவிர்க்க முடியாத அவ்ளோ முக்கியமான உலக விளையாட்டா? ஐபிஎல்கிறதே ஒரு யாவாரம். அதுல விளையாடறதா நடிக்கிறவனுக்கும் காசு, அவனை ஏலம் எடுத்தவனுக்கும் காசு அதுல அம்பயரா ஆட்டம் காட்டறவனுக்கும் காசு.

ஐபிஎல் நடத்தறவனுக்கும் கொள்ளைக்காசு அதை ஒளிபரப்பற டிவிக்காரனுக்கும் காசு. அதையும் ஒரு விளையாட்டுன்னு பாக்கறவன்தான் லூசு. இதுல கமென்டரி மோசமா இருந்தா மட்டும் என்னா குறைஞ்சுடப்போகுது? அதுலயும் ஐபிஎல் ஒரு வியாபாரம்னு தெரிஞ்சு கிண்டல் பண்ற அறிவாளிகள்கூட இதைப்பத்தி எழுதிட்டிருக்காங்க. 
இந்த யாவாரத்தை ஒரு விளையாட்டா நினைச்சுகிட்டு பாத்துகிட்டு பதிவு போட்டுகிட்டு இருக்கிறவங்களுக்கும் - லாக்டவுன் காலத்துல டாஸ்மாக் போக முடியாம கைநடுங்கிட்டு கிடந்தவங்களுக்கும், டாஸ்மாக் திறந்ததும் அடிச்சுப்புடிச்சு லைன்ல முட்டி மோதிகிட்டு நின்னவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கா என்ன?" என்று கூறப்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Social media post about RJ Balaji