சரும நோயால் அவதியடையும் பிரபல தமிழ் நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க மற்றும் எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மம்தா மோகன்தாஸ். இவர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார். இவர் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இந்த நிலையில், மம்தா மோகன்தாஸ் சருமம் சம்பந்தப்பட்ட நோயால், அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சருமத்தின் மீது மச்சங்கள் ஏற்படும். உடலின் நிறம் மாற்றமடையும். நாட்கள் ஆக ஆக சிறிய மச்சங்கள் பெரிதாகி கொண்டே செல்லும்.

இது தொடர்பாக மம்தா மோகன்தாஸ் வலைத்தளத்தில் தெரிவித்ததோடு சூரிய பகவானுக்கு வேண்டுகோள் விடுத்தவாறு உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, ''பிரியமான சூரிய பகவானே, என் சருமம் வண்ணத்தை இழந்து கொண்டுள்ளது. இதனால், நான் உன் முன் வந்து நிற்கிறேன். 

நீ இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்பே உனக்காக விழித்து எழுந்து உன் வெதுவெதுப்பான ஒளியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உன் சக்தியை எனக்கு கொடு. நான் உனக்கு கடன்பட்டு இருப்பேன். இதற்கு மேல் எப்போதும் உன் மீது கருணையோடு இருப்பேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

skin desease affect to actor mamtha mokandas


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->