'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாகும் மாநாடு பட வில்லன்.! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வந்த நிலையில், கிரேன் விபத்து ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2020இல் இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

 அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை  படக்குழு வெளியிட்டு படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திர கனி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் காட்சிகள் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SJ Surya negative role in Indian 2 movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->