ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
Sivakarthikeyan write song in jailor movie
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக படக்குழு காத்திருப்பதாகவும் செய்திகள் நிலவி வருகின்றன.
மேலும், இந்த படத்தில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னடத்தின் பிரபலமான நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் ரஜினி ரசிகர்களையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் சூப்பர் ஹிட் பாடலான அரபிக்குத்து பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
English Summary
Sivakarthikeyan write song in jailor movie