வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக்கி வரும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்தியேன் நடித்து வருகிறார். இது அவருடைய 21 ஆவது படம் ஆகும். 

இந்த படத்தில், இராணுவ வீரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், தனது உடலை கடுமையான உடற்பயிற்சி மூலம் முழுவதுமாக மாற்றி உள்ளார். இதற்காக வெயிட் லிஃப்ட்டிங், கன் ஷூட் என்று தேவையான பயிற்சிகளையும் பெற்றுள்ளார். 

இதுகுறித்த வீடியோ ’கடின உழைப்பு எதையும் செய்யும் திறனைக் கொண்டு வரும்’ என்ற கேப்ஷனுடன் ‘ஹார்ட்ஸ் ஆன் ஃபயர்’ என்ற டேக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவரது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ’எஸ்கே21’ படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan weight loss vedio viral in social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->