சிவகார்த்திகேயன் சிஎம்.. விஷ்ணு விஷால் காண்டாகிட்டாரா.. ஹாட்ஸ்பாட் 2மச் பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!
Sivakarthikeyan CM Vishnu Vishal sang the guitar Hotspot 2 press conference creates a stir
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட்ஸ்பாட் 2மச் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு, சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Yours Shamefully குறும்படம் மற்றும் ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தின் மூலம் கவனம் பெற்ற விக்னேஷ் கார்த்திக், இந்த முறை “டூ மச்” என்ற பெயரிலேயே இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படம் ஜனவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசத் தொடங்கிய விக்னேஷ் கார்த்திக், “சென்சார் கட்டுப்பாடுகள் காரணமாக முழுமையாக டூ மச்சாக போக முடியவில்லை. ஆனால் எந்த அளவுக்கு போக முடியுமோ, அந்த அளவுக்கு போயிருக்கிறோம்” என்று கூறினார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
படத்தில் கள்ளக் காதல் விவகாரங்கள் இடம்பெற்றுள்ளனவா, அதை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “காதலில் எது நல்ல காதல், எது கள்ளக் காதல்?” என்ற சினிமா டயலாக் பாணியில் பதிலளித்து சமாளித்தார். மேலும், கரூர் சம்பவத்தை மையமாக வைத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. கதை 2023-லேயே லாக் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் இந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
விஜய்யை கலாய்க்கும் காட்சிகள் உள்ளதாக எழுந்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். “இது முழுக்க முழுக்க கற்பனை. சூப்பர் ஸ்டார் கூட பபுள் கம் தட்டி வாயில் போடுவார். சிவாஜி படம் பார்த்ததே இல்லையா?” என்று கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் 2050-ஆம் ஆண்டில் முதல்வராக இருப்பதாக கற்பனையாக காட்டப்பட்டுள்ளதால்தான், தயாரிப்பாளர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் புரமோஷன்களுக்கு வரவில்லையா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு விக்னேஷ் கார்த்திக், “இந்த படம் முதலில் ஜனவரி 30-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விஜய் சார் படம் வெளியாகாததால் முன்கூட்டியே ரிலீஸ் செய்கிறோம். விஷ்ணு விஷால் சார் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருப்பதால் புரமோஷன்களுக்கு வர முடியவில்லை. இதைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
மொத்தத்தில், ஹாட்ஸ்பாட் 2மச் படத்தை விட, அதனைச் சுற்றியுள்ள விவாதங்களும், இயக்குநரின் சர்ச்சை பதில்களும் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
English Summary
Sivakarthikeyan CM Vishnu Vishal sang the guitar Hotspot 2 press conference creates a stir