கடல்கடந்து திருமணம் செய்யப்போகும் சிம்பு.?! மேலாளர் கொடுத்த விபரம்.!  - Seithipunal
Seithipunalநடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து கம் பேக் கொடுத்தார். இதன் பின், கௌதம் மேனன் இயக்கத்தில் எங்கு தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக, தற்போது சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மார்ச் மாதத்தில் ஏற்படும் வெளியாக இருக்கிறது. நடிகர் சிம்பு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவது அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் கவலையடைய கூடிய விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அவர் ஒரு இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியது. இந்த தகவல் தீயாக பரவிய நிலையில் இதற்கு சிம்புவின் மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu manager about simbus Marriage Gossips


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal