மிக பிரமாண்டமாக நடைபெறும் ‘பத்து தல' படத்தின்' இசை வெளியீட்டு விழா..‌ தயாரிப்பாளர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.

அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று பத்து தல திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை நேரில் உள் விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவலின் படி நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu in pathu thala movie audio launch on March 18 in nehru indoor stadium


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->