சிம்புவின் ‘பத்து தல' படத்தின்' அடுத்தடுத்த அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.!
Simbu in 2nd release on March 13
சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.
அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தின் 2வது பாடல் வரும் மார்ச் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Simbu in 2nd release on March 13