சில்க் ஸ்மிதாவின் திரைப்பயண காரணகர்த்தா மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!
Silk Smitha Movie Director Death at 75
1981 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான இணையைத் தேடி எனும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன். சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் இந்த திரைப்படத்தின் மூலமாக அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, வச்சால், வர்ண தேரு போன்ற திரைப்படங்களையும் ஆண்டனி இயக்கியிருக்கிறார். இவிடே தீராது, ஈ லோகம், ராச்சனா, குரே மனுஷ்யர், மானிகியன், க்ளைமாக்ஸ் ஆகிய திரைப்படங்களையும் இயக்கி இருக்கின்றார்.

திருச்சூரில் இருக்கும் சோவனூர் பகுதியில் ஆண்டனி பிறந்தார். ஈஸ்ட்மேன் என்ற ஸ்டூடியோவை கொச்சியில் திறந்து புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
75 வயதான ஆண்டனி ஈஸ்ட்மேன் மறைவுக்கு மலையாள திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை தும்பூரில் இருக்கும் சர்ச்சில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.
English Summary
Silk Smitha Movie Director Death at 75