ஷ்ரேயாவின் டீனேஜ் புகைப்படம்.! துளி கூட அடையாளமே தெரியல.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் மூலமாக வாய்ப்புகளைப் பெற்று நடிகையாக முயன்றவர் தான் ஸ்ரேயா சரண். அதன் பின்னர், அவருக்கு நல்ல மார்க்கெட் கிடைக்க ரஜினியுடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது கிளாமருக்கு எல்லையே இருக்காது. 

இதனால், அவருக்கு என்று ரசிகர் கூட்டம் அதிகமானது. இவர், தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற திரையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது, ரஷ்யாவை சேர்ந்த பேட்மின்டன் வீரர் ஒருவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

இதன் காரணமாக தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமலும், சினிமாவில் நடிக்க நாட்டமில்லாமலும் தனது கணவருடன் ஜாலியாக வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். அடிக்கடி, கணவருடன் இருக்கின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுபிபர். 

இந்த நிலையில், தற்போது அவரது டீனேஜ் புகைப்படம் ஒன்று  வைரலாகி வருகின்றது. இதில், யார் ஷ்ரேயா என்பதை கண்டுபிடிக்கவே கடினமாக உள்ளது.