தனது காதல் விவகாரம் குறித்து முதல் முறையாக ஷிவாங்கி ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியின் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமானவர் தான் சிவாங்கி. தற்போது அவரது அந்தரங்கம் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தது வைரலாகி வருகின்றது. 

நடிகைகள் ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார் ,உமா ரியாஸ்கான் ஆகியோர் கலந்துகொண்டு பிரபலமாகிய நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் தீபாவளி நவம்பர் 14ஆம் தேதி துவங்கியது. 

இதில் மாஸ்டர் பாபா பாஸ்கர், ஷகிலா, அஸ்வின், மதுரைமுத்து, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, கடைக்குட்டி சிங்கம் தீபா, மற்றும் கன்னி ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். இதில், கோமாளிகளாக பாலா, புகழ், மணிமேகலை, ஷரத், விஜே பார்வதி, சுனிதா, டிக் டாக் சக்தி மற்றும் சிவாங்கி ஆகியோர் இருக்கின்றனர். 

மிக கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்லும் இந்த நிகழ்ச்சிக்கு சமீபத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்து ஷிவாங்கி குறித்து பாராட்டியிருக்கிறார். 

இந்த நிலையில் ஷிவாங்கியிடம் நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நீங்கள் சாம்விஷாலை காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்ப, இதுகுறித்து ஷிவாங்கி அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் அவரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன். எங்கு சென்றாலும் அவரையும், அவருடைய நண்பர்களையும் அழைத்து செல்வேன். இன்ஸ்டாகிராமில் பலரும் அப்படித்தான் கேள்வி எழுப்புகின்றனர். இல்லவே இல்லை." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shivani open talk about love


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->