'திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்' - பிரபல நடிகை பகீர் பதிவு!
Sheela rajKumar post goes viral
ஷீலா ராஜ்குமார் தனது எதார்த்தமான நடிப்பில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரதநாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஷீலா 'ஆறாவது சினம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் டூ லேட், திரௌபதி, மண்டேலா, நூடுல்ஸ் போன்ற திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன்.
நன்றியும் அன்பும் எனது கணவருக்கு என குறிப்பிட்டுள்ளார். திருமண உறவு உறவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
English Summary
Sheela rajKumar post goes viral