சர்க்காரு வாரிப்பட்டா வசூல் இத்தனை கோடியா.?! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் மகேஷ்பாபு இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் சர்க்காரு வாரிப்பட்டா. இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

சர்க்காரு வாரி பட்டா படம் ரிலீசாவதை முன்னிட்டு மகேஷ்பாபு ரசிகர்கள் ஆந்திராவில் அவருக்கு நிறைய பேனர்களை வைத்திருந்தனர். அதுபோல, ஆந்திராவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு 35 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டு இருக்கின்றது. 

வழக்கமாக மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவருடைய ரசிகர்கள் கட்அவுட் வைப்பது வழக்கம். இருப்பினும் முதல் முறையாக ஹீரோயினுக்கு இவ்வளவு பெரிய கட்அவுட் வைத்து ஆந்திர ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். 

இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarkaru varipatta collection 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal