'நித்யா மேனன் சொன்னது எல்லாமே பொய்' காதலித்த சந்தோஷ் போட்டுடைக்கும் விஷயங்கள்.! - Seithipunal
Seithipunal


திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுவது நித்யா மேனனின் திருமணம் குறித்த விஷயம்தான். மலையாளத்தில் ஆராட்டு பட தனது விமர்சனத்தின் மூலம் பிரபலமடைந்த சந்தோஷை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, " சந்தோஷ் என்னை மிகவும் சிரமப் படுத்தினார். 6 ஆண்டுகள் என்னை பின் தொடர்ந்து நிறைய வதந்திகளை பரப்பி தொல்லை கொடுத்தார். 30-க்கும் எண்களில் இருந்து எனக்கு கால் செய்து தொல்லை கொடுத்தார். என் தாய் தந்தைக்கும் அவரால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவர் மீது போலீசில் புகார் கொடுக்கச் சொல்லி பலரும் என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் நான் அவரை மன்னித்து விட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலையில், இது குறித்து சந்தோஷ் வர்க்கி வெளியிட்டுள்ள விளக்கத்தில், "2009 முதல் 2021 வரை நித்யா மேனனிடம் பழகினேன். அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்று அவரது அம்மா கூறினார். ஆனால், அவரது அப்பா அவர் சிங்கிள் என்று தெரிவித்தார். இதனால் குழம்பிப் போனேன். எனக்கு முன்பே அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்திருந்தால் நான் காதலிக்க மாட்டேன். 

என் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர கூட அவர்கள் முயற்சித்தார்கள். என் தந்தைக்கு இறப்பிற்கு பின் நான் எந்த விஷயங்களிலும் ஈடுபடவில்லை. ஒரு நபருக்கு எத்தனை சிம் கார்டு வாங்க முடியும் என்பது இந்திய சட்டத்தில் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நம்பரிலிருந்து நான் அழைத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இது நம்பும்படியாக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Santhosh varkey about nithya Menon


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->