பிரபல சீரியல் இந்தியில் ரிமேக்.! சின்னத்திரை ரசிகர்கள் குஷி.!   - Seithipunal
Seithipunal


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது இந்த சீரியல் டி ஆர் பி யில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷாமிலி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருப்பதாக கூறி இருந்தார். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க ஷாமிலி முடிவு செய்துள்ளாராம்.

ரோஜா சீரியலில் நடிகை அக்ஷையா இந்த சீரியலில் இணைவதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர், "தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்பதை பொறுத்து தான் எனது சந்தோசம். வில்லியாக இருப்பதால் வெறுத்துவிடாதீர்கள்." என்று அவர் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், தற்போது தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ள 'ரோஜா' சீரியல் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

roja serial in hindhi


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal