''ராயன்'' திரைப்படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ்! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை அவரை எழுதி இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ''ராயன்'' என பெயரிடப்பட்டது. 

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், காளிதாஸ், ஜெயராம், பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ''ராயன்'' திரைப்படத்திற்கான பின்னணி இசையை முடித்துள்ளதாக நடிகர் தனுஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். 

இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rayan movie update 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->