ராஷ்மிகா மந்தனாவின் அனிமல்! அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்! - Seithipunal
Seithipunal


ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'அனிமல்' படத்தில் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. 

சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகும் படம் 'அனிமல்'. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

மேலும் இதில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட பலர் நடித்துள்ளனர். டி.சீரிஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அமிர்த் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். 

மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதி கட்ட பணிகள் நிறைவடையாமல் தாமதமானதால் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பட குழுவினர் இந்த படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவரது பெயர் கீதாஞ்சலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக அனில் கபூரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika Mandana look in Animal movie


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->