ஓடிடி ரிலீஸுக்கு தயாரான ''ரசவாதி'': வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


மௌனகுரு, மகாமுனி போன்ற திரைப்படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது ''ரசவாதி தி அல்கெமிஸ்ட்'' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கடந்த மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

அர்ஜுன் தாஸ் இந்த திரைப்படத்தில் சித்த மருத்துவராக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஓடிடி தளம் வாங்கியுள்ளது. 

அதன்படி வருகின்ற ஜூன் 21ஆம் தேதி ''ரசவாதி'' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rasavathi movie OTT release


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?




Seithipunal
--> -->