தேதி அறிவிச்சாச்சு.! கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போதுவரை  திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் திரைப்படங்கள் வெளியாவதில் பல சிக்கல்கள் உண்டாகின. முன்னணி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது தற்போது வரை வெளியாகாமல், திரையரங்குகள் திறப்புக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் தயாராகியுள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி ரணசிங்கம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று தெரிவித்திருந்தார். தற்போது அந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில்,  க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranasingam movie release date announcement


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal