RRR படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜமவுலி.!! 
                                    
                                    
                                   rajamouli RRR movie title motion poster today release 
 
                                 
                               
                                
                                      
                                            திரையுலகில் பாகுபலி என்ற திரைப்படம் மூலமாக பெரும் வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்ற இயக்குனர் ராஜமவுலி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்த படமானது டிவிவி தானன்யாவால் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 
 இந்த படத்தின் படிப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு முன்னோட்ட காட்சி இன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த படம் வரும் வருடத்தில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       rajamouli RRR movie title motion poster today release