சாவா குறித்து ரகுமான்-கங்கனா மோதல்: பாரபட்சத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் நடிகை கடும் பதில்...!
Rahman Kangana clash over Savarkar actress gives strong reply amidst allegations of bias and hatred
‘சாவா’ திரைப்படம் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் படமாக இருக்கலாம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறிய கருத்து, திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,“அன்புள்ள ரகுமான் ஜி, நான் ஒரு காவி சிந்தனையை ஆதரிப்பவள் என்பதாலேயே திரையுலகில் முன்முடிவோடும், பாரபட்சத்தோடும் அணுகப்படுகிறேன். ஆனால், உங்களைப் போல் அளவுக்கு அதிகமான பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை இதுவரை நான் சந்தித்ததில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இயக்கிய ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் கதையை ரகுமானிடம் பகிர விரும்பியதாகவும், ஆனால் கதையை கேட்பதற்கே அல்லாமல் தன்னை நேரில் சந்திக்க கூட அவர் மறுத்துவிட்டதாகவும் கங்கனா குற்றம்சாட்டியுள்ளார். “பிரசார நோக்கமுள்ள திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை” என்ற காரணத்தை முன்வைத்து ரகுமான் விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், ‘எமர்ஜென்சி’ திரைப்படம் விமர்சகர்களால் உயர்ந்த பாராட்டைப் பெற்றதோடு, எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்தும் பாராட்டு கடிதங்கள் வந்ததாக கங்கனா தெரிவித்துள்ளார்.
“என் படைப்பை அரசியல் கோணத்தை தாண்டி பலர் மதித்தனர். ஆனால், உங்கள் பார்வையை வெறுப்பு மறைத்துவிட்டது. அதற்காகவே நான் உங்களுக்காக வருந்துகிறேன்” என தனது பதிவை அவர் முடித்துள்ளார்.
English Summary
Rahman Kangana clash over Savarkar actress gives strong reply amidst allegations of bias and hatred