வேட்டையன் பராக்... நாளை சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தில் முக்கிய அப்டேட் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்து புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பி வாசு முடிவு செய்தார். ஆனால் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன்படி சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சந்திரமுகி 2 படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragawa Lawrence in chandramukhi 2 movie update tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->