இறந்த நடிகர் புனீத் குமார் நினைவாக பாகுபலி நடிகரின் நெகிழ்ச்சி செயல்.!  - Seithipunal
Seithipunal


கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிகவும் இளம் வயதில் புனித் ராஜ்குமார் இழப்பு இந்திய திரையுலக பிரபலங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ரசிகர்கள், பிரபலங்கள் என்று புனித் ராஜ்குமார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் இறுதியாக யுவரத்னா திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக இறப்பதற்கு முன்பு நடித்து முடித்த திரைப்படம் ஜேம்ஸ். 

இந்த திரைப்படம் அவர் இறந்த பின், வெளியாகி ரசிகர்களை உருக வைத்தது. அவர் இறந்து ஓராண்டு ஆகவுள்ள நிலையில் புனித் ராஜ்குமார் நண்பரும், நடிகருமான ராணா டகுபதி தனது அலுவலகத்தில் அவரது சிலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவரே பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puneeth rajkumar statue in rana tagupathy office 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->