கட்சிகள் கடந்து நட்பு பாராட்டக் கூடியவர் மயில்சாமி.. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மயில்சாமி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985-ம் வருடம் வெளியாகிய கன்னிராசி திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும்.

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மயில்சாமி பலகுரல் மன்னனாக திகழ்ந்தவர். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 - ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர் நடிகர் மயில்சாமி.

அத்துடன் பெருந்தொற்று கொரோனாவால் பலரும் அவதிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தவர் தான் நடிகர் மயில்சாமி. இந்த நிலையில், அவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட நிலையில், தான் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு செய்தியை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார்.

இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் 'நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudhuchery governor thamizhisai condolences to actor mayilsamy


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->