இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தை காலமானார்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தையான பட்டியல் சேகர் காலமானார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான பட்டியல் என்ற திரைப்படத்தை தயாரித்தவர் சேகர். அதனைத் தொடர்ந்து இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டு வந்தார்.

இவர் பிரபல இயக்குனரான விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார். இந்த நிலையில் 63 வயதான பட்டியல் சேகர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இவர் பட்டியல் படத்தை தொடர்ந்து தனது மகன் கிருஷ்ணன் நடிப்பில் வெளியான கழுகு மற்றும் அலிபாபா படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் ராஜதந்திரம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Producer pattiyal sekar passed away


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->