அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு.. திரையரங்கிற்கு முன் பெட்ரோல் குண்டு வீச்சு.!! - Seithipunal
Seithipunal


அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இன்று அஜித்தின் வலிமை படம் வெளியானது.

அஜித்தின் வலிமை திரைப்படத்தை, அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்கங்களில் முதல் காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் அதிகாலை முதலே அஜித்தின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம், பட்டாசு வெடித்தல் போன்றவற்றை செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

petrol bomb in kovai theater


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->