சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல்.. இன்று மாலை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி மிக பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிலையில் பத்து தல படத்தின் 'ராவடி' எனத் தொடங்கும் வீடியோ பாடல் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கு நடிகை சாயிஷா நடமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathu thala movie Ravadi video song today release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->