சுய இன்பம் குறித்து, ஓவியா ஓபன் டாக்.! ரசிகர் சந்தேகத்திற்கு ஓவியாவின் பதில்.!  - Seithipunal
Seithipunal


தமிழ்சினிமாவில், களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து இருக்கும் ஓவியா தன்னுடைய சுறுசுறுப்பான குழந்தைத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார். அதன் பின்னர், ஓவியா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அவரது வளர்ச்சி இல்லை. கேரளத்து பெண்கள் என்றாலே தமிழகத்தில் நல்ல மரியாதை இருக்கும். ஓவியாவின் பூர்வீகம் கேரளா தான் என்ற போதிலும், ஓவியாவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின்னர் பிக் பாஸ் சீசன் 1 இல் ஓவியா கலந்துகொண்டார். 

தமிழ் மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும், தன் பக்கம் இழுத்தார். ஓவியா ஆர்மி என்று ரசிகர் பட்டாளம் அதிகரித்தது  இதில் இருந்து வெளியேறிய ஓவியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால், ஓவியா ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டார். 

இருப்பினும், அந்த படங்கள் அவ்வளவாக வெற்றி வாகை சூடவில்லை. எப்பொழுதும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, நிறைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

மேலும், சில நேரங்களில் நேரலையில் பேசுவதும் வழக்கம். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஓவியா கேள்வி எழுப்பியதற்கு அவருடைய ரசிகர் ஒருவர் இதுபோன்ற குற்றங்களை குறைப்பதற்கு சுய இன்பம் செய்வதே தீர்வு என்று கூறியுள்ளார். அதற்கு ஓவியாவும் ஆமாம் என்று பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oviya open talk about masturbating 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal