#Oscar2024 || ஆஸ்கார் விருதுகளை வாரி குவிக்கும் "ஓப்பன்ஹெய்மர்".!! முழு‌ லிஸ்ட் இதோ.!! - Seithipunal
Seithipunal


திரை உலகின் உயரிய விருதான ஆஸ்காரின் 96 ஆவது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பெரும் சர்ச்சையை கிளப்பிய ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் விருதுகளை வாரி குவித்து வருகிறது.

அந்த வகையில்,

சிறந்த துணை நடிகர்: சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தில் நடித்த ராபர்ட் டவுனி தட்டிச் சென்றார். இது அவரது முதலாவது ஆஸ்கர் விருதாகும்.

சிறந்த படத்தொகுப்பு (Editing) : சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் எடிட்டர் ஜெனிபர் லேம் தட்டிச் சென்றார்.

சிறந்த இயக்குநர்: சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவு: சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருது ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் Hoyte van Hoytema-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆவணப்படம்: சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "20 Days in Mariupol" என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்: சிறந்த விஷுவல் எஃபெக்ட் ஆஸ்கார் விருதை "காட்ஜில்லா மைன்ஸ் ஒன்" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oppenheimer won Oscar awards list


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->