எனது வாழ்க்கையை மாற்றிய படம் இதுதான்... கஜோல் நெகிழ்ச்சி!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளன. 

தமிழில் பிரபு தேவா நடித்த 'மின்சார கனவு' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

கஜோல் 'தி ட்ரையல்' என்ற புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த பிரமோஷனை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த படம் குறித்த பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், 'உதார் கி ஜிந்தகி' என்ற திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகின்றது. இந்த திரைப்படத்திற்கு சுருக்கப்பட்ட வேறு பெயர்கள் எதுவும் இல்லை. இந்த திரைப்படம் பெரும்பாலான மக்கள் நினைவுகளில் இருக்காது. 

ஆனால் இந்த திரைப்படம் தான் எனது வாழ்க்கை மற்றும் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது. பல விஷயங்களினால் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். 20 வயதில் நான் எடுத்த முக்கியமான முடிவாக இதனை பார்க்கிறேன். 

சிறப்பாக நடிப்பதற்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்பட்டது. எனது மனதின் பங்கு அதிகம் தேவைப்படாத படங்களில் நடித்தேன். குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டேன். 

அப்போதுதான் அதிகமான ஈடுபாட்டினை என்னால் சினிமாவில் கொடுக்க முடியும் என கற்றுக் கொண்டேன். அதனை இதுவரை பழக்கப்படுத்தி வருகிறேன். அதன் நினைவுகளால் தான் இன்றைய நாளில் இந்த பதிவு தேவைப்பட்டது. இந்த அதிவேகமான உலகில் ஒரு முக்கிய நினைவூட்டலாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one film changed my life Kajol


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->