நடிகர் விஜய் சேதுபதி நடித்த '96' படத்தின் 2-ம் பாகம் குறித்து புதிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளி பருவ காதல் கதையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது,  இயக்குனர் பிரேம்குமார், நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் பிரேம்குமார் சமீபத்திய நேர்காணலில் பேசியபோது அவர் கூறியது, '96' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை நான் எழுதிவிட்டதாக கூறியுள்ளார். இந்த படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை எழுதக் கூடாது என்ற முடிவில் தான் இருந்தேன், ஆனால் எழுதி முடித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்த கதையாக மாறிவிட்டது என குறிப்பிட்டு இருக்கிறார்

இதனை அடுத்து இந்த படத்தை இயக்குவற்கான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்களின் தேதிகளின் அடிப்படையில் இப்படம் படம் உருவாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New update on the 2nd part of 96 starring actor Vijay Sethupathi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->