ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்திய நயன்தாராவின் சொத்துமதிப்பு.!
nayanthara property value Makes shock
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வருகிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். சமீபகாலமாக திரைப்படங்களிலும் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து டைட்டில் கார்டு போடுகின்றனர்.
நடிகை நயன்தாரா விற்கு 37 வயது ஆகும் நிலையில், அவரை இளமையாகவே ரசிகர்கள் கண்டு வியந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் முப்பது வயதிற்கு பின்னர் தான் நயன்தாராவிற்கு வாழ்க்கையில் திருப்பங்களும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இவர் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிகவும் பழைய கான்செப்ட் என்று பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடிக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.74 கோடி என்று கூறப்பட்ட நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறைவாக இருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
English Summary
nayanthara property value Makes shock