நயன்தாராவின் இடத்தை பிடித்த திரிஷா.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் ஒருவர்தான் அஜித்குமார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாக இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் படு பயங்கரமாக இருக்கிறது. ஏ கே 61 படம் குறித்த அறிவிப்பு வெளியான சில தினங்களில் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 

லைக்கா நிறுவனம் தயாரிக்கின்ற இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் அனிருத் இசையமைக்கிறார். இதன் சூட்டிங் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்டில் இந்த படம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்கனவே நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால் அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாகவும் கிட்டத்தட்ட அவர் நடிப்பது உறுதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் திரிஷாவுக்கு படவாய்ப்புகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது. 

தற்போது நயன்தாராவும் குழந்தைகளை எண்ணி, ஓய்வில் இருப்பதால் அனைத்து பட வாய்ப்புகளும் திரிஷாவை நோக்கி போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara missed ak 62 movie and trisha filled itself


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->