இசை உலகம் அதிர்ச்சி...! ஆயிரக்கணக்கான பாடல்களை தந்த குரல் இனி இல்லை...! - ஆஷா போஸ்லே மறைவு...!
music world shocked voice that thousands songs no more Asha Bhosle passes away
பழம்பெரும் பின்னணி பாடகியும் இசை உலகின் மறக்க முடியாத குரலுமான ஆஷா போஸ்லே, மும்பையில் வசித்து வந்த நிலையில், 92 வயதில் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனடியாக தென் மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவாசக்குறைவு ஏற்பட்டதால், செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், ஆஷா போஸ்லே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த துயரச் செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அவரது இறுதிச்சடங்குகள் நாளை மாலை 4 மணியளவில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற ஆஷா போஸ்லே, 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளார். குறிப்பாக இந்தி திரைப்படங்களில் காலத்தால் அழியாத பல பாடல்களை வழங்கியுள்ளார்.
தமிழிலும் ‘செண்பகமே செண்பகமே’, ‘நீ பார்த்த பார்வை’, ‘செப்டம்பர் மாதம்’, ‘கொஞ்சநேரம்’ போன்ற பிரபலமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மொத்தமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இசைச் சிகரம் எனப் போற்றப்படுகிறார்.மத்திய அரசின் பத்ம விபூஷண் விருதை பெற்ற ஆஷா போஸ்லே, மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையாவார். அவரது மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
music world shocked voice that thousands songs no more Asha Bhosle passes away