திமுக முக்கிய புள்ளியின் சகோதரர் மறைவு.. வேதனையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர் என் ஆர் மனோகர் 1994ஆம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். பின்பு 1995 ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றினார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கி உள்ளார். பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடிகராக வலம் வந்தார். 

இயக்குனரும், நடிகருமான ஆர் என் ஆர் மனோகர் மாரடைப்பால் நேற்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இறஙக்ள செய்தியில், திமுக சட்ட ஆலோசகர் திரு. என்.ஆர். இளங்கோ எம்.பி., அவர்களின் சகோதரர் ஆர்.என்.ஆர். மனோகர் அவர்கள் மறைந்தார் என்ற வேதனைமிகுந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். 

நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்பட்ட மனோகர் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin condolences on the death of RNR Manohar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->