தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை; ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார்..!
The first session of the Tamil Nadu Legislative Assembly following the TVK government assuming office takes place tomorrow
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும், தமிழக ஆளுநர் அர்லேகர் முதலில் உரையாற்றவுள்ளார்.
தமிழகத்தில் 17-வது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 146 பேர் புதியவர்கள். முதல் முறையாக அவைக்கு வருபவர்கள். எனவே, சட்டசபை மரபுகள் என்ன..? அவையில் எதை பேசவேண்டும்..? எதை பேசக்கூடாது என்பதை எம்எல்ஏக்கள் தெரிந்துக் கொள்வதற்காக 02 நாள் புத்தாக்க பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார். இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 09.30 மணியளவில் ஆளுநர் அர்லேகர் காரில் புறப்படுகிறார். காலை 09.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்பார்.
அதன்பின்னர், ஆளுநர் அர்லேகர் அவைக்கு அழைத்து வரப்படுவார். காலை 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். இந்த உரை சுமார் 01 மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது. அதன்பின்னர், ஆளுநர் அர்லேகரின் உரையை, வலதுபுற இருக்கையில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். இடதுபுற இருக்கையில் ஆளுநரின் முதன்மை செயலாளர் ஷஜன் சிங் சவான் அமர்ந்திருப்பார்.

இந்த சட்டசபை கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று ஆளுநர் அர்லேகர் புறப்பட்டு செல்வார். அதன்பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டம் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும். அப்போது கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். ஆளுநர் உரையுடன் நாளை தொடங்கும் கூட்டம் 02 நாள் அல்லது 03 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
English Summary
The first session of the Tamil Nadu Legislative Assembly following the TVK government assuming office takes place tomorrow