ஒருபடி அரசி : எம்ஜிஆர் - தேவரின் அந்த நட்பின் கதை தெரியுமா உங்களுக்கு?!  - Seithipunal
Seithipunal


அந்த காலத்தில் கோவையில் "ஜூபிடர் பிக்சர்ஸ்" என்ற நிறுவனம் திரைப்படங்கள் தயாரித்து வந்தது. அந்த நிறுவனத்தில் துணை நடிகராக ஒப்பந்தமாகி எம்.ஜி.ஆர் நடித்து கொண்டு இருக்கிறார்!

அந்த நிறுவனத்திற்கு சண்டை காட்சிகளுக்கு உடல் பலமான வாட்ட சாட்டமான இளைஞர் ஒருவர் நடிக்க வருகிறார். 

அவர் பெயர் மருதமலை மருதாசலமூர்த்தி அய்யாவு தேவர் சின்னப்பா தேவர்! இந்த பெயரின் சுருக்கம் தான் எம்.ஏ.சின்னப்ப தேவர்! 

அப்படி சண்டை காட்சிகளுக்காக வந்த சின்னப்ப தேவருக்கும், எம்.ஜி.ஆர்க்கும் நெருக்கமான நட்பு ஏற்படுகிறது. 

இருவரும் ஒன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஒன்றாக சுற்றுகிறார்கள். சின்னப்ப தேவர் வீட்டுக்கு அருகில் எம்.ஜி.ஆர் தன் தாய், அண்ணனுடன் குடி வருகிறார்.

சின்னப்ப தேவரும் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வந்து போகும் அளவுக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ஒரு சமயம் எம்.ஜி.ஆரை காண சின்னப்ப தேவர் அவர் வீட்டுக்கு செல்கிறார்.

வாசலில் தாய் சத்யபாமா கவலையோடு வாசலையே பார்த்தபடி அமர்ந்து இருக்கிறார். அப்போது சின்னப்ப தேவர், "அம்மா ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்" என கேட்க, அதற்க்கு 'ராம சந்திரனும் (எம்ஜிஆர்), சக்ரபாணியுயையும் இன்னும் காணவில்லை. அவர்கள் வாங்கி வரும் சம்பளத்தை வைத்து அரிசி வாங்கி சமைக்கனும். புள்ளைங்க பசியோடு இருப்பாங்க" என சொல்லி கவலைப்படுகிறார் தாய் சத்யபாமா.

சின்னப்ப தேவர் : "இருங்கம்மா வரேன்" என சொல்லிவிட்டு கிளம்பி நேராக தனது வீட்டுக்கு வந்தவர், யாருக்கும் தெரியாமல், தன்னுடைய டவுசரில் இரண்டு பைகளிலும் அரிசியை அள்ளிப்போட்டு ஒரே ஓட்டமாக எம்.ஜி.ஆரின் தாயிடம் வந்து, "அம்மா முறத்தை எடுங்க" என சொல்லி அப்படியே முறத்தில் அரிசியை கொட்டுகிறார்.

சின்னப்படியால் ஒரு படி இருக்கிறது அவர் எடுத்துவந்த அரிசி. அதை ஆசை தீர வாங்கி சமைத்து வைக்கிறார் தாய் சத்தியபாமா.

மிகவும் தாமதமாக வந்த எம்.ஜி.ஆரும் அவர் அண்ணனும் வீட்டில் கஞ்சி தயாராக இருப்பதை கண்டு ஆவலாக சாப்பிடுகிறார்கள்.

இந்த அரிசி எப்படி வந்தது என அம்மாவை கேட்டு தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், அந்த காலத்தினால் செய்த உதவியாக (தேவர் கொடுத்த அரிசிக்காக) தேவர் பிலிம்ஸ்-க்காக 17 படங்கள் நடித்து கொடுக்கிறார்.

அதுமட்டுமில்லை, தேவர் பிலிம்ஸ் வளர்ச்சியில் எம்.ஜி.ஆர் பங்கு அளப்பறியது. சின்னப்ப தேவர் தடுமாறும் போதல்லாம் எம்.ஜி.ஆர் கை கொடுக்க தவறுவதில்லை.

காரணம் ஒரு படி அரிசி!

"தர்மம் தலை காக்கும்,
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

கூட இருந்தே குழி பறிச்சாலும்,
கூட இருந்தே குழி பறிச்சாலும்,
கொடுத்தது காத்து நிக்கும்…

செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!"
என்று இதைத்தான் எம்.ஜி.ஆர் பாடி இருப்பார் போல!


பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் முகநூல் பதிவில் இருந்து உங்களுக்காக. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR ORU PADI ARISI CHINNAPPA DEVAR STORY


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->