இவானா நடிப்பில் 'மதிமாறன்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதிமாறன்'. இந்த திரைப்படத்தில் இவானா கதாநாயகியாகவும், வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். 

மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், நரேன், பாவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக்கியுள்ளது. மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. 

இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

விரைவில் இந்த திரைப்படத்தின் டிரைலர், இசை மற்றும் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mathimaran movie update


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->