வைரல்... இணையதளத்தை கலக்கும் ''மாஸ்க்'' திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கவின் லிப்ட், டாடா திரைப்படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல வரவேப்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது கவின் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ''மாஸ்க்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, சார்லி, பால சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் பிளாக் மெட்ராஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் கடந்த மே 17ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. 

இந்நிலையில் ''மாஸ்க்'' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வெற்றிமாறன், கவின் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mask film shooting photos


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->