டியோராமா சர்வதேச திரைப்பட விழா! 'மாமனிதன்' திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் மாமனிதன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்திருந்தனர். 

மாமனிதன் திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் வெளியானது போது பெரிதாக பேசப்படவில்லை. வெறும் 40% பார்வையாளர்களால் மட்டுமே இத்திரைப்படம் பார்க்கப்பட்டது.

ஆனால் ஓடிடி தளத்தில் மாமனிதன் படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த திரைப்படம் பார்த்துவிட்டு நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலினை இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamanithan movie screened at the diorama Film Festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?




Seithipunal
-->